ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி; படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்..director rajamouvli new movie samuthirakkani

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் ஆகிறது.

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை இயக்கியவர் ராஜமவுலி. இவ்விரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு என வெளிவந்த அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போதும் 300 கோடி பட்ஜெட்டில் தமிழ் ,மலையாளம்,  இந்தி,  தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரும்  பிரமாண்டமான படம் ஒன்றை இயக்குகிறார்.

ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர்என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 6 ம் தேதி முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய திருப்புமுனையாக அமையும் கதாபாத்திரத்திற்கு நடிகர் சமுத்திரக்கனி தொடர்புகொண்டு ஒப்பந்தம் செய்துள்ளார் ராஜமவுலி.