ப்ளீஸ் கவனிங்க.. பிரம்மாண்ட பாகுபலி இயக்குனரை வேதனைப்பட வைத்த டெல்லி ஏர்போர்ட்! என்ன சொல்லியிருக்கார் பார்த்தீங்களா!!

ப்ளீஸ் கவனிங்க.. பிரம்மாண்ட பாகுபலி இயக்குனரை வேதனைப்பட வைத்த டெல்லி ஏர்போர்ட்! என்ன சொல்லியிருக்கார் பார்த்தீங்களா!!



director-rajamouli-tweet-to-delhi-airport

பிரபாஸ் - ராணா நடிப்பில் வெளிவந்து உலகளவில் அமோக வரவேற்பை பெற்று, மாபெரும் சூப்பர் ஹிட்டான பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. இத்திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் ராஜமவுலி. அவர் தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ராஜமவுலி தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விமான நிலையத்தின் நிலை குறித்து மிகவும் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், அன்புள்ள டெல்லி விமானநிலையம், நான் நள்ளிரவு 1 மணிக்கு லுஃப்தான்ஸா விமானம் மூலம் விமான நிலையத்திற்கு வந்தேன். அங்கு கொரோனா பிசிஆர் பரிசோதனைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. அதனை அனைத்து பயணிகளும் தரையில் அமர்ந்து கொண்டும், சுவற்றில் படிவங்களை வைத்தும் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. அவர்களுக்கு மேஜைகள் வழங்குவது என்பது ஒரு சாதாரண சேவை.

அதுமட்டுமின்றி ஏராளமான தெரு நாய்கள் வெளியேறும் வாயிலுக்கு அருகே நின்றுகொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தேன். கண்டிப்பாக இது முதன்முறையாக இந்தியா வரும் வெளிநாட்டவர்களுக்கு நல்லவிதமான எண்ணத்தை உருவாக்காது. தயவுசெய்து இதைக் கவனத்தில் கொள்ளவும் நன்றி என்று பதிவு செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது.