விஜய்யின் வெற்றிப்படத்தை இயக்க மறுத்த பிரபல இயக்குனர்! வெளியான தகவல்கள்!

விஜய்யின் வெற்றிப்படத்தை இயக்க மறுத்த பிரபல இயக்குனர்! வெளியான தகவல்கள்!


Director parthipan said no to direct vijay movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். விஜய் படம் என்றாலே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் என அனைவரும் ஆர்வத்துடன் சம்மதித்து விடுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் விஜய். மேலும் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் மாபெரும் வெற்றிபெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெறுகிறது.

vijay

விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கமாட்டோமா என இயக்குனர்கள் பலர் காத்திருக்க தன்னை வைத்து படம் இயக்குங்கள் என விஜய்யே கூறியும் மறுத்துள்ளார் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்.

ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான 3 இடியட்ஸ் படத்தை தமிழில் இயக்குனர் சங்கர் நண்பன் என்ற பெயரில் ரிமேக் செய்திருந்தார். முதலில் இந்த படத்தை தமிழில் ரிமேக் செய்யச்சொல்லி பார்த்திபனிடம் வாய்ப்பு சென்றுள்ளது. விஜய்யும் பார்த்திபனிடம் நீங்களே இயக்குங்கள் என்று கூறியுள்ளார்.

vijay

ஆனால், விஜய்யை வைத்து இதுபோன்ற படங்களை என்னால் இயக்க முடியாது என்றும் அவரை வைத்து எடுக்கும் படம் வேறு மாதிரியான படமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.  எனவே இந்த படத்தை இயக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை.  ஆனால் கண்டிப்பாக விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார் பார்த்திபன்.