தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் நெல்சன்.. நடிகர் யார் தெரியுமா.?Director nelson new production company

இயக்குனர் நெல்சன் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப் குமார். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

Nelson dilipkumar

சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளியானா ஜெயிலர் திரைப்படம் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளது. இதனையடுத்து இவர் யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Nelson dilipkumar

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் சொந்தமாக ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும், அதில் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.