BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
லியோ படத்தில் விஜயை அடித்த மிஸ்கின்; பதிலுக்கு பன்ச் கொடுத்த சம்பவம்.. மனம்திறந்த இயக்குனர்.!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவரும் விஜய். தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும் நடித்த வருகிறார்கள்.
லியோ திரைப்படம் அடிதடி சண்டை காட்சிகள் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், விஜய்க்கும் தனக்குமான சண்டை காட்சி குறித்து மிஸ்கின் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், "விஜய்க்கும் - எனக்கும் இடையேயான சண்டை மாசாக இருக்கும். நாங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென விஜயின் தலையில் அடித்துவிட்டேன்.

பின் குட்டிமா.., என ஓடி உடனடியாக தெரியாமல் பட்டுவிட்டது என கூறினேன். விஜய் அதற்கு பரவாயில்லை என்று கூறினார். இதனால் ஒரு ரிகர்சல் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார். அதன்பின், விஜயின் கை தெரியாமல் என்னை அடித்தது.
பதறிப்போன விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் வரவில்லை செல்ல குட்டி எனக்கு கூறினேன்" என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.