"வடிவேலு அந்த மாதிரி வேலையை என் படத்தில் காட்ட முடியாது" மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜின் வைரலாகும் பேட்டி.?

"வடிவேலு அந்த மாதிரி வேலையை என் படத்தில் காட்ட முடியாது" மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜின் வைரலாகும் பேட்டி.?



Director mari selvaraj viral interview

கோலிவுட் சினிமாவில பிரபல இயக்குனராக இருப்பவர் மாறி செல்வராஜ். இவர் 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். முதல் படமே மிகப் பெரும் ஹிட்டாகியது. இதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார்.

Maamannan

இவ்வாறு தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துவரும் மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி கதாநாயகனாகவும், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

'மாமன்னன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரையரங்கில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதியை பாராட்டினர்.

Maamannan

இந்த நிலையில், மாரி செல்வராஜ் மேடையில் பேசிய போது நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக்காக அவரை அவ்வளவு பாராட்டி இருந்தேன். ஆனால் படத்தில் அதற்கு அப்படியே எதிர்மாறாக நடித்திருக்கிறார். அவரின் நகைச்சுவை இந்த படத்தில் இல்லை என்று கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.