இயக்குனர் மனோபாலாவின் மரண கடிதம்.! சுந்தர்.சி அதிர்ச்சி தகவல்.!



director-manobala-writting-death-letter-for-sundhar-c

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது அரண்மனை நான்காம் பாகம் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தில் தமன்னா, சந்தோஷ் பிரதாப், ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் மனோபாலா நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று இயக்குனர் சுந்தர்.சி கவலை தெரிவித்துள்ளார். 

இயக்குனரான மனோபாலா அரண்மனை மூன்றாம் பாகத்தில் நடித்து நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்துள்ளார். இவரின் நகைச்சுவைக்காகவே அரண்மனை மூன்றாம் பாகம் படம் பெரிய அளவில் செம ஹிட் கொடுத்தது. தற்போது எடுத்துள்ள அரண்மனை நான்காம் பாகம் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. இந்த படம் ஆரம்பிக்கும் முன்பே கல்லீரல் பிரச்சனையால் சிறிது காலம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். 

manobala

இயக்குனர் மனோபாலா மருத்துவமனையில் இருக்கும்போது அரண்மனை நான்காம் பாகம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது இயக்குனர் சுந்தர்.சிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார், அதில் தான் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் இருப்பதாகவும், அரண்மனை நான்காம் பாகம் படத்தில் என்னால் நடிக்க முடியாது, அதனால் எனக்கு பதில் வேற யாரையாவது நடிக்க சொல்லுங்கள் என்றும் எழுதி இருந்தார்.

இதனைப் படித்தவுடன் இயக்குனர் மனோபாலாவுக்கு சுந்தர்.சி போன் செய்து, "இப்படி எல்லாம் சொல்லாதீங்க சார், உங்களுக்கு ஒன்னும் இல்ல, உங்களுக்கு சரியானதும் அடுத்த படத்தில் கண்டிப்பாக நீங்கதான் நடிப்பீங்க" என்று நம்பிக்கையுடன் பேசினார். அதற்கு மனோபாலா," இல்லடா நான் இனி ரொம்ப நாள் இனிமே இருக்க மாட்டேன், என்னுடைய உடம்பு கண்டிஷன் ரொம்ப சீரியஸா இருக்கு." என்று கூறியுள்ளார். மனோபாலா இறந்தது பற்றி மனம் திறந்து ஒரு நேர்காணலில் தற்போது இந்த தகவல்களை சுந்தர்.சி பகிர்ந்துள்ளார்.