"மொய்தீன் பாயாக வாழ்ந்த தலைவர்.." பிரபல இயக்குனரின் பாராட்டு..!! குஷியில் லால் சலாம் பட குழு.!

"மொய்தீன் பாயாக வாழ்ந்த தலைவர்.." பிரபல இயக்குனரின் பாராட்டு..!! குஷியில் லால் சலாம் பட குழு.!


director-karthick-subburaj-lauds-super-star-rajnikanth

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்த்தின் பாய் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு தயாராகியுள்ளது.

Lal Salaamஇந்த திரைப்படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 9-ஆம் தேதியன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்தை அதிகரித்துள்ள நிலையில் படக்குழுவிற்கு பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் லால் சலாம் திரைப்படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தலைவர் ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தின் மொய்தீன் பாயாக வாழ்ந்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதையை உருவாக்கிய இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் ஒட்டுமொத்த குழுவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் நம்மிடையே மத நல்லிணக்கத்தின் அவசியத்தை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.