இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மகனை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மகனை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!


Director Gautam Vasudev Menon son photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா, விண்ணை தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது.

இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் சிறந்த இயக்குனராக மட்டுமின்றி ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம் உள்ளிட்ட சில படங்கள் வெளியாகியுள்ளது.

gautham vasudev menon

இந்நிலையில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனனின் மகனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவரின் மகன் ஆர்யா யோஹன் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஆடியுள்ளார். தனது மகன் குறித்து ஒரு பேட்டி ஒன்றில் கூறுகையில் மிகவும் அர்பணிப்பான மகன் என்று கூறியுள்ளார்.