ஊரடங்கில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட 49 வயது பிரபல தயாரிப்பாளர்! வைரலாகும் புகைப்படங்கள்!

ஊரடங்கில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட 49 வயது பிரபல தயாரிப்பாளர்! வைரலாகும் புகைப்படங்கள்!


director-dil-raju-got-second-marriage

தெலுங்கு சினிமாவில் விநாயக் இயக்கத்தில் தில் என்ற படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் தில் ராஜு. இவர் பத்ரா, ஆர்யா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பர்ஃபக்ட், ஃபிடா, ஜானு உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். மேலும் அவரது தயாரிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான சதமானம் பவதி என்ற திரைப்படம் தேசிய விருதையும் வென்றது.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து மகளுக்கு திருமணம் முடித்துவிட்டு தனியாக வசித்து வந்த அவருக்கு சமீபத்தில் தேஜஸ்வினி என்பவருடன்  நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள, நரசிங்கம்பள்ளியில் அமைந்துள்ள வெங்கடேஷ்வரா கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் அந்த திருமணத்தில் ஊரடங்கு காரணமாக மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கலந்து கொண்டுள்ளனர்.

dil raju

இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது அவரது திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

dil raju

dil raju