சினிமா

இயக்குனர் பாலாவிடம் சிக்கி சின்னாபின்னமான அழகிய நடிகர்களின் ஒரு தொகுப்பு!

Summary:

Director bala movies list in tamil

தமிழ் சினிமாவைப்பற்றி தெரிந்த அனைவர்க்கும் இயக்குனர் பாலாவை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். ஒருமுறை இயக்குனர் பாலா படத்தில் நடித்துவிட்டால் அடுத்தது எந்த மாதிரியான கதையிலும் எளிதாக ஒரு நடிகரால் நிச்சயம் நடிக்க முடியும். அந்த அளவிற்கு புழிந்து எடுத்துவிடுவார் இயக்குனர் பாலா. அந்த மாதிரி இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து கிழிவாங்கிய நடிகர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

1. சேது - விக்ரம்
இயக்குனர் பாலாவின் முதல் படம். மேலும் நடிகர் விக்ரமின் வளர்ச்சிக்கான முக்கியமான படம். இந்த படத்தில் நடிகர் விக்ரம் மனநல நோயாளியாக மிகவும் நேர்த்தியாக நடித்திருப்பார்.

2. நான் கடவுள் - ஆர்யா
இயக்கலானார் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான திரைப்படம் நான் கடவுள். படம் எதிர்மறையான விமர்சங்கங்களை பெற்றது. படத்தில் ஒரு அகோரியாக நடித்திருப்பார் நடிகர் ஆர்யா.

3. அவன் இவன் - விஷால் மற்றும் ஆர்யா
பாலாவினால் நகைச்சுவை படம் என்று கூறப்பட்ட ‘அவன்- இவன்' படத்தில் விஷால் மாறு கண் கொண்ட திருநங்கையாக நடித்திருப்பார். விஷாலுடன் இணைந்து நடிகர் ஆர்யாவும் நடித்திருப்பார்.

4. பரதேசி - அதர்வா
பாலாவின் சமீபத்திய படமான பரதேசியில் ஹீரோ அதர்வாவின் ஹேர் ஸ்டைல், உடை என எல்லாமே தனித்துவமாக இருக்கும். இதில் சாக்குத் துணியில் தைத்த உடைக்கு தேசிய விருது கிடைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

5. நாச்சியார் - ஜி.வி.பிரகாஷ்குமாா்
GV பிரகாஷ்குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் நாச்சியார். எதிர்பார்த்த அளவிற்கு இந்தப்படம் சரியாக ஓடவில்லை.

6. தாரைதப்பட்டை
இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் தாரைதப்பட்டை. இந்தப்படமும் சரியாக ஓடவில்லை. மேலும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே அதிகம் வந்தது.

 

 


Advertisement