சினிமா

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பிரபல நடிகை! சரமாரியாக கத்தியால் குத்திய தயாரிப்பாளர்! பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்!

Summary:

திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் பிரபல நடிகை மால்வி மல்ஹோத்ராவை தயாரிப்பாளர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் சீரியல் நடிகை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் குமாரி 18 பிளஸ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.  மேலும் இவர் சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் மால்விக்கு சினிமா தயாரிப்பாளர் யோகேஷ் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் லிவிங் டுகெதரில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் யோகேஷ் குமார் மால்வியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மால்வி அவரிடம் பேசுவதையும் குறைத்து வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த யோகேஷ் குமார் சமீபத்தில் இரவு 10 மணிக்கு  காபி ஷாப்பிலிருந்து வெளியே வந்த மால்வியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த மால்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள யோகேஷ் குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement