நயன்தாரா பட இயக்குனருக்கு திருமணம் முடிஞ்சாச்சு! இணையத்தை கலக்கும் அழகிய புகைப்படங்கள்!!

நயன்தாரா பட இயக்குனருக்கு திருமணம் முடிஞ்சாச்சு! இணையத்தை கலக்கும் அழகிய புகைப்படங்கள்!!


Director ashwin saravanan got marriage

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தை இயக்கியதன் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். அதனைத் தொடர்ந்து அவர் டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கியிருந்தார். திகில் படமான இது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 

இதற்கிடையில் அஸ்வின் எஸ்.ஜே.சூர்யாவின் இறவாக்காலம் என்ற படத்தை இயக்கியிருந்தார். அப்படம் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது நயன்தாராவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து கனெக்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு, தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் எழுத்தாளரான காவியா ராம்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களது திருமணம் நேற்று புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.