ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
திடீர் மாரடைப்பால் உயிரிழந்த தமிழ் திரைப்படப் பிரபலம்! கண்ணீரில் மூழ்கிய திரையுலகினர்!!
தமிழ் சினிமாவில் இயக்குனர் ருத்ரய்யா இயக்கத்தில் உருவான அவள் அப்படித்தான் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அருண்மொழி. அதனைத் தொடர்ந்து அருண்மொழி 1986 ஆம் ஆண்டு வெளிவந்த காணிநிலம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் அவர் நடிகர் நாசர் நடிப்பில் வெளிவந்த ஏர்முனை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி அருண்மொழி நிலமோசடி, மூன்றாவது இனம், இசைவானில் போன்ற பல்வேறு ஆவணங்கள் மற்றும் குறும்படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் பிரசாத் ஸ்டுடியோ நடத்திவந்த திரைப்பட கல்லூரியில் பணியாற்றி வந்தார். பின்னர் சமீபத்தில் அவர் சொந்தமாக நடிப்பு பள்ளி ஒன்றையும் தொடங்கினார்.
இவ்வாறு பன்முகத் திறமை கொண்டு விளங்கிய அவர் நேற்று இரவு சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவால் திரைத்துறையினர் பலரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். மேலும் அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்