இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகராக களமிறங்கும் படம் எது தெரியுமா?
சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த அர்ஜூன் ரெட்டி என்னும் தெலுங்கு காதல் படம் மிக பெரிய வெற்றியை தேடி தந்தது.
இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் தேவரகொண்டா என்பவர் நடித்துள்ளார்.
அந்த படத்திற்கு அடுத்து தற்போது தெலுங்கில் தயாராகிவரும் நோட்டா என்னும் திரைப்படத்தில் அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் அனந்த் சங்கர் அவர்கள் இயக்கி வருகிறார்.
இயக்குனர் அனந்த் சங்கர் இதற்கு முன்பு இருமுகன் என்னும் படத்தை இயக்கி உள்ளார்.
இந்த அனந்த் சங்கர் இதற்கு முன்பு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆவார்.
ஆனால் தற்போது அனந்த் சங்கர் இயக்கத்தில் நோட்டா படத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சிறிய காட்சி ஒன்றில் நடிக்க உள்ளார்.
இயக்குனர் அனந்த் சங்கர் இதனை மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.