"லோகேஷ் கனகராஜ் படத்துல சாகணும்" - தனது விருப்பம் குறித்து மனம்திறந்த இயக்குனர் அனுராக்.!  Director Anurag about Leo 

 

விஜய் ரசிகர்களால் பெருமளவு எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், சாந்தி மாஸ்டர் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். 

இதற்கிடையில் பிரபல இயக்குனர் அனுராக், லியோ படத்தில் கோமியா கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

cinema news

இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கூறியவர், "லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதிலும் அவரின் படத்தில் சாகக்கூடிய கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்புகிறேன். 

மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு அவை காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை காட்டிலும், லோகேஷின் படத்தில் சாகும் காட்சியில் இருப்பது நல்ல வரவேற்பு தரும்" என்று கூறியுள்ளார்.