அமீரின் மாயவலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது; லிங்க் உள்ளே.!
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அமீர் சுல்தான் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் மாயவலை. இப்படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இசையமைப்பு பணிகளை யுவன் சங்கர் ராஜா மேற்கொண்டுள்ளார். படத்தில் அமீர் சுல்தான், சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் சக்தி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில், இன்று (டிசம்பர் 25) படத்தின் முதல் பாடல் வெளியாவதாக படக்குழு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான 'வாழ்க்கை ஒரு மாயவலை' பாடல் வெளியாகியுள்ளது. சிநேகன் வரிகளில், யுவன் சங்கர் ராஜா, கபில் கபிலன் குரலில் இப்பாடல் வெளியாகியுள்ளது.