ப்ளீஸ். எங்களுக்காக அதை செய்யுங்கள்.! காத்திருக்கிறோம்..சூப்பர் ஸ்டாரிடம் கோரிக்கை விடுத்த பிரபல இயக்குனர்!!

ப்ளீஸ். எங்களுக்காக அதை செய்யுங்கள்.! காத்திருக்கிறோம்..சூப்பர் ஸ்டாரிடம் கோரிக்கை விடுத்த பிரபல இயக்குனர்!!


director-alphonse-puthran-request-to-rajini

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் என்ன செய்தாலும் அதனை அவரது ரசிகர்கள் பெருமளவில் ட்ரெண்டாக்குவர். இந்த நிலையில் அவர் நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அது பெருமளவில் வைரலானது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அல்போன்ஸ் புத்திரன் நடிகர் ரஜினிக்கு கோரிக்கை விடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் சார் ப்ளீஸ் இன்ஸ்டாகிராமில் பேச துவங்குங்கள். உங்களது பேச்சுக்களை கேட்கும்போது புல்லரிக்கிறது. எவரேனும் சிலரது பேச்சை கேட்கும் போதுதான் இவ்வாறு நடக்கும். உங்களது பேச்சு ஓஷோவை விட தனித்தன்மை வாய்ந்ததாக, மதிப்புமிக்கதாக உள்ளது. அதனால் நீங்கள் இன்ஸ்டாகிராம் துவங்கி அதில் தினமும் பேச துவங்குங்கள்.

rajini

இது உங்களது பேச்சை கேட்க துடிக்கும் மில்லியன், பில்லியன் கணக்கான ரசிகர்களின் விருப்பம். நீங்கள் எப்பொழுது என்ன விரும்புகிறீர்களோ அதை பேசுங்கள். அது ஏபிசிடியாக இருந்தால் கூட பரவாயில்லை.. அதுவும் எங்களுக்கு பாடல்தான். அன்பு மற்றும் வேண்டுதல் உங்களுக்காக எப்பொழுதும் இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளார்.