அடிதூள்.. வேற லெவலில் சூப்பர் ஹிட்டாகும் லவ் டுடே.! வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!!

அடிதூள்.. வேற லெவலில் சூப்பர் ஹிட்டாகும் லவ் டுடே.! வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!!



dil-raju-take-over-love-today-telungu-release-rights

தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் பிரதீப் ரங்கநாதன். அவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி, அதில் தானே ஹீரோவாக நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ஆதித்யா கதிர், ரவீனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்த்ததை விட அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் படம் வெளியிடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனர் தில் ராஜு கைப்பற்றியுள்ளார். தில் ராஜு தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.