வாரிசு, புஷ்பா 2 திரைப்பட தயாரிப்பாளர் வீடு & அலுவலகங்களில் வருமான வரிச்சோதனை.!



dil-raju-and-naveen-yerneni-producers-house-raided-by-i

 

தெலுங்கில் வெளியான பல முன்னணி படங்களை தயாரித்து வழங்கிய தில் ராஜு, நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் & தெலுங்கு மொழியில் வெளியான வாரிசு திரைப்படத்தை தயாரித்து வழங்கி இருந்தார்.

அதனைத்தொடர்ந்து, பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான ராம் சரணின் கேம் சேஞ்சர், சங்கராந்திக்கு வொஸ்தாவு ஆகிய படங்களையும் சமீபத்தில் தயாரித்து வழங்கினார். இப்படங்கள் ரூ.400 கோடி வசூலை கடந்து இருக்கிறது. 

இதையும் படிங்க: கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

dil raju

ஐடி சோதனை

இந்நிலையில், இன்று காலை முதலாக தில் ராஜுவின் வீடு, அலுவலகம், அவரின் மகள் ஹன்சிகா ரெட்டி வீடு, சகோதரர் சிரிஷ், உறவினர்கள் வீடு என 8 க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 55 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

மேலும், நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தை தயாரித்து வழங்கிய நவீன் எர்னானி, ரவி ஆகியோரின் வீடு & அலுவலகத்திலும் சோதனைகள் நடைபெறுகிறது. புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ.1800 கோடிகளை கடந்து வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிங்க: நடிகர் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!