தூர்தர்ஷன் சேனலில் ஏற்படவிருக்கும் புதிய மாற்றம்.! ஷாக்கான ரசிகர்கள்!!

தூர்தர்ஷன் சேனலில் ஏற்படவிருக்கும் புதிய மாற்றம்.! ஷாக்கான ரசிகர்கள்!!


dhoortharshan channel logo changed

தற்காலத்தில் ஏராளமான பல தொலைக்காட்சி சேனல்கள் இருந்தாலும், அப்போதைய காலகட்டத்தில் பிரபலம் அடைந்திருந்த ஒரே  தொலைக்காட்சி தூர்தர்ஷன். இதில் வாரம் ஒருநாள் மட்டுமே திரையிடப்படும் தமிழ் படம், தமிழ் பாடல்களுக்காக ரசிகர்கள் பெரிதும் காத்துக் கிடந்த காலம் உண்டு. மேலும் 2010இல் ஒளிபரப்பப்படும் செய்திகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பெரும் ரசிகர்கள் இருந்தனர்.

 இந்நிலையில் கடந்த 1951ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தூர்தர்ஷன் சேனலின் லோகோ மாற்ற முடிவு செய்துவிட்ட நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து புதிய லோகோவை டிசைன் செய்யும் கண்டெஸ்டை ஆன்லைனில் நடத்தியது. இதில் சுமார் 10,000 புதிய லோகோக்கள் வந்து குவிந்து இருந்தது.

doordharshan

 இந்நிலையில் அத்தகைய logo களிலிருந்து தேர்வு செய்யும் குழுக்கள் அமைக்கப்பட்டு இறுதியாக 5 லோகோக்கள் தேர்வு செய்யப்பட்டது . மேலும் அந்த லோகோக்களை டிசைன் செய்த நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் தேர்வு செய்யப்பட்ட ஐந்து லோகோகளிலிருந்து தரமான ஒரு லோகோ விரைவில் முடிவு செய்யப்படும் என பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.