அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
லோ நெக் உடையில்.. டீப் கவர்ச்சி காட்டிய தர்ஷா குப்தா.! "என் மிகப்பெரிய பலவீனம் இதுதான்" என பதிவு.!
சென்னையில் பிறந்த பிரபல நடிகையான தர்ஷா குப்தா கடந்த 2017-ஆம் வருடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்ட முள்ளும், மலரும் சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையுலகில் அடி எடுத்து வைத்தார். அதற்கு பின்னர், தர்ஷா குப்தா தொடர்ந்து, "அவளும் நானும்", "மின்னலே" மற்றும் "செந்தூரப்பூவே" போன்ற சீரியல்களிலும் நடித்தார். இருந்தாலும் முதல் சீரியலை போல மற்ற சீரியல்களில் நடித்த போது தர்ஷா குப்தாவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

தொடர்ந்து, அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் 2020 முதல் 21 வரை கலந்து கொண்டார். இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட தர்ஷா குப்தாவிற்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதன் பின்னர், திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜியின் இரண்டாவது திரைப்படமான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தர்ஷா குப்தாவிற்கு கிடைத்தது. தொடர்ந்து, சதிஷுடன் சேர்ந்து ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தர்ஷா குப்தாவிற்கு தற்போது மெடிக்கல் மிராக்கிள் எனும் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் அவருக்கு 2021 ஆம் ஆண்டு FAB விருது வழங்கும் விழாவில், சிறந்த அறிமுக நடிகைக்கான விருது "ருத்ரதாண்டவம்" படத்திற்காக நடித்ததற்காக கிடைத்தது. என்னதான் நிறைய சீரியல் மற்றும் படங்களில் நடித்து இருந்தாலும், தர்ஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்டர்கள் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெறுபவை. இப்போதும், அவர் கவர்ச்சியாகவும், டிரடிஷனலாகவும் ஆடை அணிந்து ரசிகர்களை அன்றாடம் போட்டோஷூட் நடத்தி கவர்ந்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் சிவப்பு நிற கவர்ச்சி உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தியுள்ளது, ரசிகர்கள் மத்தியில் கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளது.