அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும்.. ருத்ரதாண்டவம் பட நடிகை.! வைரல் க்ளிக்ஸ்.!

அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும்.. ருத்ரதாண்டவம் பட நடிகை.! வைரல் க்ளிக்ஸ்.!


dharsha-gupta-sagunthalai-photo-shoot

நடிகை தர்ஷா குப்தா தமிழில் ருத்ரதாண்டவம், ஓ மை ஹோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் மாடலிங்கில் நிறைய ஆர்வமுடையவர். அவ்வப்போது நிறைய போட்டோ ஷுட்கள் எடுத்து வெளியிட்டு மக்களிடம் பிரபலமானவர்.

இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் குக் வித் கோமாளி ஷோவின் இரண்டாவது சீசனில் பங்குபெற்றார். அதன்மூலம் ரசிகர்கள் மத்தியில் நிறைய பிரபலமும் அடைந்தார். குக்வித் கோமாளி புகழுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

samantha

இவர் சமூக வளைதளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாக்ராமில் தொடர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வருவது இவரது வழக்கம். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது. சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படத்தில் அவர் நடித்த சகுந்தலை கேரக்டர் போல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்தான் அது.