சினிமா

கர்ணன் படத்தின் புதிய அப்டேட்.! தனுஷ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக திகழ்ந்து வருபவர் நட

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் திரைப்படம் கர்ணன். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றும் இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார் . 

இந்த படத்தில் ஹீரோயினாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் யோகி பாபு ,கௌரி கிஷன் ,லட்சுமி பிரியா ,லால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல்  9-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க' என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படத்தின் இராண்டாவது சிங்கள் ட்ராக் பாடலாக  'பண்டாரத்தி புராணம்' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில், கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement