தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் பட அப்டேட்ஸ்... வைரலாகும் புகைப்படம்... உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் பட அப்டேட்ஸ்... வைரலாகும் புகைப்படம்... உற்சாகத்தில் ரசிகர்கள்.!


Dhanush Hollywood movie updates

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ், இந்தி மொழி படங்களை தாண்டி தற்போது 'தி க்ரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். 

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இப்படத்தில் தனுஷ் வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில் தற்போது தி க்ரே மேன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் தோற்றங்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் தோற்றத்தையும் படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் ஜூலை மாதம் 22ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.