சினிமா

சீரியஸாக நடித்தது போதும்! ரூட்டை மாற்றும் நடிகர் தனுஷ்! எந்த இயக்குனருடன் இணைகிறார் தெரியுமா?

Summary:

Dhanush going to act with pradeep ranganathan movie

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தனுஷ். அதனை தொடர்ந்து அவர் 
அடுத்தடுத்ததாக ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் தனுஷ் கைவசம் தற்போது  கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் உள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து தனுஷ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தொடர்ந்து சீரியஸான கதாபாத்திரத்திலேயே  நடித்து வரும் தனுஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும், அதனடிப்படையிலேயே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.


Advertisement