தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
தனுஷின் 51-வது திரைப்படத்தில்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! ஜி.வி கொடுத்த அப்டேட்.!
நடிகர் தனுஷ் தன்னுடைய 50-வது திரைப்படத்தில் தற்போது பிஸியாக இருக்கிறார். இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் நடிகை துஷாரா விஜயன் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து, இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் வேலைகள் நடந்து வரும் நிலையில் தனுஷின் 51 வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த 51ஆவது திரைப்படத்தையும் தனுஷ் தான் இயக்கி நடிக்கப் போகிறாராம். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் தன்னுடைய அக்கா மகனை அவர் அறிமுகப்படுத்த உள்ளார்.
சமீபத்திய பேட்டியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசிய போது இதை உறுதி செய்துள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். இந்த செய்தி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.