யோவ்.. ஓவரா பிரஷர் ஏத்துற.! ஜானி மாஸ்டர் மீது டென்ஷனான வாரிசு பிரபலம்! வைரலாகும் பதிவு!!

யோவ்.. ஓவரா பிரஷர் ஏத்துற.! ஜானி மாஸ்டர் மீது டென்ஷனான வாரிசு பிரபலம்! வைரலாகும் பதிவு!!


Dhaman reply to jani master tweet

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கியுள்ள இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா மற்றும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலிலும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்டதாக கூறப்படும் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி அனைவரையும் குத்தாட்டம் போட வைத்துள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜானி மாஸ்டர் இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த சூப்பரான அப்டே ட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மற்றொரு வெறித்தனமான பாடல் வெளிவர இருப்பதாகவும், பெல்லாரி படப்பிடிப்பு நல்ல தருணமாக இருந்தது எனவும் குறிப்பிட்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் இதனைக் கண்ட  இசையமைப்பாளர் தமன், " யோவ் ஜானி எனக்கு ஓவரா பிரஷர் ஏத்துற" என கிண்டலாக பதிலளித்துள்ளார். அந்தப் பதிவு வைரலாகி வருகிறது.