பணிப்பெண்ணை, இசையமைப்பாளர் தேவா ரூமிற்கு அனுப்பிய சத்யராஜ்.? அதிர்ந்து போன தேவா செய்த செயல்.!deva-shares-interesting-anecdotes-with-sathyaraj

இசையமைப்பாளர் தேவா என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர் இசையமைத்த கானா பாடல்கள். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இவர் இசையமைத்த பாடல்கள் ஏராளம். 80களின் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் அறிமுக பாடல் என்றாலே அவை கட்டாயம் தேவா இசையமைத்ததாக தான் இருக்கும்.

Sathyaraj

சிறு வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட தேவா தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இசையமைப்பாளர் தேவா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்  பேட்டி அளித்துள்ளார். அதில் திரு .சத்யராஜ், திரு. மணிவண்ணன் ஆகியோருடன் பணிபுரிந்த அழகான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, "இயக்குனர் மணிவண்ணன் 'புது மனிதர்' என்ற படத்தை இயக்கினார். அப்படத்திற்கு இசையமைக்க நாங்கள் சில்வர் பீச் சென்றிருந்தோம் அங்கு சத்யராஜ் எங்கள் அனைவரையும் கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார். சத்யராஜ் இருந்தாலே அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். எங்கு சென்றாலும் அவர் ஸ்டைலில் லொள்ளு அடிப்பதை நிறுத்த மாட்டார்".

Sathyaraj

அதேபோல்" சத்யராஜ்  நான் தங்கி இருக்கும் அறைக்கு வேண்டுமென்றே ஏதாவது ஒரு பணிப்பெண்ணிடம் காப்பி கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்திருந்து பார்ப்பார். அவர் அதை செய்வார் என்று முன்பே அறிந்த நான் எந்த பெண் அறையனுள் வந்தாலும் நான் உடனே வெளியே சென்று விடுவேன். அதை பார்த்து தப்பிச்சிட்டீங்க சார் என்று சத்யராஜ் சிரித்துக்கொண்டே செல்வார்" அவ்வாறே சத்யராஜுடனான பல மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் இசையமைப்பாளர் தேவா.