கார்த்தியின் புரியாத படிப்பு, விருப்பமே இல்லாத வேலை, காதல்: விவரிக்கும் தேவ் டீசர்!

கார்த்தியின் புரியாத படிப்பு, விருப்பமே இல்லாத வேலை, காதல்: விவரிக்கும் தேவ் டீசர்!


dev-the-teaser-of-karthi-starrer-unveiled

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் தேவ் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.  

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ‘தேவ்’. ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், தீரன் அதிகாரன் ஒன்று படத்திற்குப் பிறகு நடிகை ராகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். 

dev

பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.லக்ஷ்மன் தயாரித்து வருகிறார். 

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், இன்றைய இளையதலைமுறையினர் சதிக்கும் புரியாத படிப்பு, விருப்பமே இல்லாத வேலை போன்றவற்றை சித்தரிக்கும் விதமாக இப்படம் உருவாகி வருகிறது. 

இந்த டீசரில் முதல் பாதி, யாரோ ஒருவர் சொன்னதற்காக புரியாத படிப்பு, விருப்பமே இல்லாத வேலை, போட்டி, பொறாமையில் என்ன நடக்குது என்று புரியாமல், தெரியாமல் வாழ்வது ஒரு வழி. இதற்கு எதிர்மறையாக இன்னொரு வழியும் இருக்கிறது. பிடித்த வாழ்க்கையை வாழ்வது, பிடித்தவற்றை செய்வது மட்டும் தான். இது படத்தின் 2ம் பாதியை சித்தரிக்கிறது. 


இந்நிலையில், இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலை தமிழ் சினிமாவின் மூத்த பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்தப் பாடல் பதிவு செய்யும்போது நடிகர் கார்த்தியும் ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்டுடியோவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.