
நிர்வாணமாக போட்டோ அனுப்ப சொன்னாங்க - சின்னத்திரை நடிகர் பரபரப்பு பேட்டி.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
திரையுலகில் பெரிய/சின்ன திரை வித்தியாசம் இன்றி பெண்களுக்கு பாலியல் தொல்லை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆண்களுக்கும் அதே நிலை என்ற பகீர் தகவல் தெரியவந்துள்ளது.
டெல்லி சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான தொலைக்காட்சி நடிகர் அங்கித் சிவாச். இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்னதாக மாடலிங்கில் வாழ்க்கையை தொடங்கி பின்னாளில் பிரபலமானார்.
இவர் மாடலிங்கை தொடங்கும் போது, ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக 12 வருடங்களுக்கு பின்னர் மனம் திறந்துள்ளார். இந்த விஷயம் டெல்லி மாடலிங் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மீரட்டில் இருந்து டெல்லிக்கு வந்த அங்கித், மாடலிங் துறையில் வாய்ப்பை தேடிய சமயத்தில், மாடலிங் புள்ளிகளில் சிலர் கட்டுடல் மேனியுடன் இருந்த அங்கித்தின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைக்க சொல்லியுள்ளனர்.
மேலும், பல்வேறு பார்ட்டிகளுக்கு அழைத்து பல்வேறு வகையாக துன்புறுத்தி இருக்கின்றனர். இதனால் மாடலிங் துறைக்கு 4 மாதங்களில் விடுதலை கொடுத்த அங்கித், சின்னத்திரை வழியே தனது பயணத்தை தொடங்கி சாதனை புரிந்துள்ளார்.
Advertisement
Advertisement