புது பொழிவுடன் மீண்டும் புது சீரியலில் நடிக்க வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை திபீகா... வைரலாகும் புகைப்படம்.!

புது பொழிவுடன் மீண்டும் புது சீரியலில் நடிக்க வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை திபீகா... வைரலாகும் புகைப்படம்.!


Deepika entred in new serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன் மற்றும் காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்தத் தொடரில் கடைக்குட்டி பையனான கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக  நடித்து வந்தவர் விஜே தீபிகா. பின்னர் திடீரென சீரியலிருந்து வெளியேறினார் அதற்கு முக்கிய காரணம் அவரது முகத்தில் முகப்பரு அலர்ஜி இருந்தது தான். அவர் தொடர்ந்து ஷூட்டிங்கிற்காக மேக்கப் போட போட அது அதிகமாகி கொண்டே வந்துள்ளது. 

இதனால் மருத்துவர்கள் மேக்கப் போடக்கூடாது என்று அறிவுறுத்தினர். பின் முகத்தின் சிகிச்சை மேற்கொண்ட தீபிகா இன்ஸ்டாவில் நிறைய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுடன் டச்சில் இருந்தார். தற்போது அவர் கலர்ஸ் தமிழில் சில்லுனு ஒரு காதல் தொடரில் புதியதாக நடிக்க தொடங்கியுள்ளார்.