உங்களை ரொம்ப பிடிக்கும், ஆனால் சொல்வதற்கு பயமாக இருக்கிறது! 10 வயது சிறுவன் டிடி-யுடன் எடுத்துக்கொண்ட வீடியோ!

உங்களை ரொம்ப பிடிக்கும், ஆனால் சொல்வதற்கு பயமாக இருக்கிறது! 10 வயது சிறுவன் டிடி-யுடன் எடுத்துக்கொண்ட வீடியோ!



dd instagram video

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும், ரசிகர்களுக்கு எப்பொழுதுமே பேவரட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் இவர் இன்றளவும் அதே இளமையுடன் இருக்கிறார்.

திவ்யதர்ஷினி வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார். டிடி தன்னுடைய பள்ளிப்பருவத்திலேயே  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். 

டிடி என்கிற திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியனாக செயல்பட்டார்.விஜய் ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மத்தியில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

View this post on Instagram

Short story of true kids are: This is so cute .. so this young boy must be around 10 years of age , walks to me with his parents n tel me he likes n wants to take a pic, we did and again after sometime , he comes back to tel that me that he realy likes me n he was scared to tel me ,his feelings first time n now he is not ... hahahaha I mean how sweet n respectful he was n soooo damn innocent... I think that love is priceless n wen I asked him why he wants another pic he said , simply I want it pls, isn’t it cute but wait the best part is when I was getting into the car I looked out for him n waved by to him n he waves back showing his fone where the pic he took was the wallpaper pic ... that’s it he made my day ... my lil boy wherever you are , you are goin to be a perfect gentlemen when u grow up n ur girlfriend is going to be a vry lucky girl 😘😘😘😘😘😘😘 and 👏👏to ur parents #loveisallweneed

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

பாலச்சந்தர் இயக்கிய ரெக்கை கட்டிய மனசு என்ற சின்னத்திரை சீரியலில் நடிகையாக களமிறங்கினார் டிடி. அதற்கு பின் பல சீரியல் வாய்ப்பு டிடி-யை தேடி வந்தன. இதனையடுத்து கமல்ஹாசன் தயாரித்து மாதவன் நடித்த நள தமயந்தி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் டிடி.

இந்நிலையில் டிடி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில், 10 வயது சிறுவன் ஒருவனுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோருடன் அந்த சிறுவன் வந்திருந்தான். உங்களை மிகவும் பிடிக்கும்.. ஆனால் சொல்வதற்கு பயமாக இருக்கிறது.. என சிரித்துக்கொண்டே கூறினான் சிறுவன்.