சினிமா

அடேங்கப்பா.. பாரிஸில் ஈபிள் டவர் முன் செம மாஸ் காட்டும் டிடி! பகிர்ந்த அசத்தலான சீக்ரெட்! குவியும் லைக்ஸ்கள்!!

Summary:

அடேங்கப்பா.. பாரிஸில் ஈபிள் டவர் முன் செம மாஸ் காட்டும் டிடி! பகிர்ந்த அசத்தலான சீக்ரெட்! குவியும் லைக்ஸ்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 
சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் டிடி தற்போது பாரிஸ் சென்றுள்ளார். அங்கு ஈபிள் டவர் முன் புகைப்படம் எடுத்த அவர் அதன் சுவாரசியத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், ஈபிள் டவர், கோடைக்காலத்தில் 6 இன்ச் உயரம் வளரும், குளிர்காலத்தில் 6 இன்ச் குறையும் (வெப்பநிலை காரணமாக) ஈபிள் டவரானது 20 ஆண்டு மட்டுமே இருந்திருக்க வேண்டும்.பின்னர் அது இடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அழகு காரணமாக மக்கள் அதனை செய்யவில்லை.
ஈபிள் டவர் கட்டப்படுவதற்கு காரணமாக இருந்த Gustave Eiffel அந்த டவரில் தனக்கு தனி அறையை உருவாக்கினார். அதை, அவர் யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. தற்போது வரை வாடகைக்கு விடப்படவில்லை.

ஈபிள் டவருக்கு மனைவி இருக்கிறார். அமெரிக்க பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் தனது பெயரை Erika Eiffel என மாற்றி கொண்டார் எனக் கூறியுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 


Advertisement