அட.. டிடியின் முன்னாள் கணவரா இது ? இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

அட.. டிடியின் முன்னாள் கணவரா இது ? இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!


dd-ex-husband-latest-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் திவ்யதர்ஷினி. இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என செல்லமாக அழைக்கின்றனர். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

டிடி தனது நகைச்சுவையான, கலகலப்பான துள்ளலான பேச்சால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அவர் 2014 ஆம் ஆண்டு தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்தும் டிடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இந்தியளவில் பிரபலமாக இருந்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது கிளாமராக புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது டிடி யின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்ரீகாந்த் அண்மையில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

dd