சினிமா

என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா! சர்ச்சையான கேள்விக்கு தொகுப்பாளினி டிடியின் அதிரடி பதில்!

Summary:

DD

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணிப்புரிந்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.

மேலும் விஜய் டிவியில் காபி வித் டிடி,ஜோடி, மற்றும் விருது விழாக்கள் போன்ற பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.அதனை தொடர்ந்து தற்போது ஸ்பீட் கேட் செட் கோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர் கேட்ட சர்ச்சையான கேள்விக்கு அதிரடியான பதிலை சொல்லி அசத்தியுள்ளார். அதில் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்துக்கொள்வீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு டிடி உங்கள் அன்பிற்கு நன்றி, உங்களுடைய வாழ்க்கையில் அன்பு கிடைக்க வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

மேலும் எப்போது அம்மா ஆவீர்கள்? என கேட்டதற்கு, குழந்தை பெற்றால் மட்டும் அம்மா கிடையாது அன்னை தெரேசா எவ்வளவு பேருக்கு அம்மா என்று செம்ம பதில் அளித்தார்.


Advertisement