விஜயகுமாரின் மகளால் பதறிப்போன நடன இயக்குநர் ராபர்ட்!.

விஜயகுமாரின் மகளால் பதறிப்போன நடன இயக்குநர் ராபர்ட்!.



dance master talking about vanitha


நடிகர் விஜயகுமாரின் மகளுக்கு, எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடன இயக்குநர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆலப்பாக்கத்தில் விஜயகுமாருக்கு சொந்தமாக உள்ள பங்களாவை அவரது மகளான வனிதா அபகரிக்க முயல்வதாக விஜயகுமார் பொலிசில் புகார் அளித்தார். இதனால் அவருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மூத்தமகள் வனிதா, முதலாவதாக டிவி நடிகர் ஆகாஷ், 2 வதாக தொழில் அதிபர் ஆனந்தராஜ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டார்.

vanitha

இதுபற்றி பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வனிதா தற்போது நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் பரவுவதால் மனவேதனை அடைந்த ராபர்ட் மாஸ்டர் கூறுகையில், நானும் நடிகை வனிதாவும் இணைந்து ஒரு படத்தை தயாரித்ததாகவும், இதுதவிர வேறு எந்த தொடர்பும் எங்கள் இருவருக்கும் இல்லை என கூறியுள்ளார்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக செய்தி வெளியானதால் பதறிப்போன மாஸ்டர் ராபர்ட் இவ்வாறு கூறியுள்ளார்.