சினிமா

டியர் டி.இமான்... இமானின் முன்னாள் மனைவி திருமண வாழ்த்தாக இமானுக்கு என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

Summary:

டியர் டி.இமான்... இமானின் முன்னாள் மனைவி திருமண வாழ்த்தாக இமானுக்கு என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருப்பவர் டி. இமான். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக அவரின் முதல் மனைவி விவாகரத்து செய்தார். பின் சமீபத்தில் தான் இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

டி.இமானின் இரண்டாம் திருமணத்திற்கு அவரின் முன்னாள் மனைவி மோனிகா தற்போது திருமண வாழ்த்து சொல்லி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில் டியர் டி.இமான் உங்கள் இரண்டாம் திருமணத்திற்காக வாழ்த்துக்கள். ஒருவர் வாழ்க்கையில் 12 வருடங்கள் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என் முட்டாள்தனம். அதற்காக வருத்தப்படுகிறேன்.

மேலும் கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளை நீங்கள் பார்க்கவும் இல்லை, தற்போது அவர்களுக்கும் மாற்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா? எது நடந்தாலும் என் குழந்தைகளை உன் அப்பாவிடம் இருந்து நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் நான் புது குழந்தையையும் பாதுகாப்பேன் என்று பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement