சர்க்கார் படத்திற்கு தமிழில் வாழ்த்து சொன்ன பிரபல கிரிக்கெட் வீரர்! யார் தெரியுமா?Cricket player harbanjan singh twit in tamil for sarkar

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் தமிழ் மக்களுக்கும், சர்க்கார் படத்திற்கும் தீபாவளியை முன்னிட்டு தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட ஆரம்பித்ததிலிருந்தே அவ்வப்போது இவ்வாறு தமிழில் ட்விட் செய்வது வழக்கம்.

இந்த முறை தமிழில் தீபாவளி வாழ்த்து கூறியதோடு தீபாவளியுடன் சேர்ந்து சர்க்காருக்கு ஒலிக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார். 

ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே. புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம். செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம் செழிக்கட்டும், சர்க்கரை தமிழோடு இளைய தளபதி #சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்#HappyDeepavali” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்விட்டு கமெண்டுகளில் விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.