சினிமா

அட.. வாத்தி கம்மிங் பாடலுக்கு செம அசத்தலாக ஆட்டம் போட்ட பிரபல கிரிக்கெட் வீரர்! லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ!!

Summary:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி பொங்கலை முன்னிட்டு வெளிவந்து ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி பொங்கலை முன்னிட்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் மாஸ்டர். அந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார். மேலும் மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. அதிலும் வாத்தி கம்மிங் பாடல் பெருமளவில் பிரபலமாகி இன்றுவரை பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. மேலும் சிறுவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர் தனது மகளுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement