சினிமா

வலிமை ட்ரைலரில் குக் வித் கோமாளி பிரபலம்! அட.. யார்னு பார்த்தீங்களா.! கொண்டாடும் ரசிகர்கள்!

Summary:

வலிமை ட்ரைலரில் குக் வித் கோமாளி பிரபலம்! அட.. யார்னு பார்த்தீங்களா.! கொண்டாடும் ரசிகர்கள்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்துள்ள திரைப்படம் வலிமை. இது அஜித்தின் 60வது படமாகும். இதனை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வலிமை படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ட்ரைலரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் குறிப்பிட்ட காட்சி ஒன்றில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். அந்த புகைப்படத்தை புகழின் ரசிகர்கள் பகிர்ந்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.மேலும் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.


Advertisement