சினிமா 18 Plus

நடிகர் விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் செல்லும் குக் வித் கோமாளி பிரபலம்! யார்னு பார்த்தீர்களா!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ். இவர் முதல் சீசனில் ரம்யா பாண்டியன் மற்றும் இந்த சீசனில் தர்ஷா குப்தா மற்றும் பவித்ராவுடன் சேர்ந்து செய்த அலப்பறைகள் வேற லெவல்.

இவரது கலகலப்பான பேச்சு, உடற் பாவனைகள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.  மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற புகழுக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அதாவது புகழ் அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி, நடிகர் அருண் விஜய்யின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து புகழ் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் புகழ் விஜய் சேதுபதியுடன் பைக்கில் செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement