
அடஅட.. குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! அடுத்த சீசன் எப்போ? வெளிவந்த சூப்பர் தகவல்!!அடஅட.. குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! அடுத்த சீசன் எப்போ? வெளிவந்த சூப்பர் தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் பெரும் பாராட்டு கிடைத்தது. அனைவரும் அதனை விரும்பி பார்த்தனர்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகவும்,கோமாளியாகவும் கலந்து கொண்ட பலருக்கும் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்ட அஸ்வின் மற்றும் புகழ் இருவரும் இணைந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். போட்டியாளராக கலந்துகொண்ட பவித்ரா சதீஸ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.
கோமாளியாக அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த சிவாங்கியும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார். அவர்கள் மட்டுமின்றி தர்ஷா குப்தா,மதுரை முத்து, தீபா உள்ளிட்டோரும் ஏராளமான படங்களில் நடித்து வருகின்றனர். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது துவங்கும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அடுத்த சீசன் வருகிற நவம்பர் முதல் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்கான போட்டியாளர்களுக்கான தேர்வும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement