சினிமா

வாவ்..கியூட் ஜோடி! குக் வித் கோமாளி கனி அக்கா கல்யாணத்தப்போ எப்படிருயிக்காங்க பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி&n

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி  குக் வித் கோமாளி இதன் முதல் சீசனை விட 2வது சீசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகிலா, தர்ஷா, மதுரை முத்து, தீபா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கனி வித்தியாசமாக, அசத்தலாக சமைத்து டைட்டிலை தட்டிச்சென்றார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் காரக்குழம்பு கனி என செல்லமாக அழைக்கப்படும் இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் ஆவார். மேலும் நடிகைகள் விஜயலக்ஷ்மி மற்றும் நிரஞ்சனாவின் மூத்த சகோதரியும் ஆவார். மேலும் இவர் ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார்.

கனியின் கணவர் இயக்குனர் திரு. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.  இந்த நிலையில் கனி மற்றும் திருவின் திருமண வரவேற்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Advertisement