இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
"பணத்திற்காக பயில்வான் என்னனாலும் பண்ணுவார்" மறைந்த நடிகர் மாரிமுத்து தம்பியின் காட்டமான பேச்சு..

தமிழ் சினிமாவில் இயக்குனர், துணை இயக்குநர், நடிகர், எழுத்தாளர், கதை ஆசிரியர் என பலவிதமான திறமைகளை கொண்டவர் தான் மாரிமுத்து. இவர் முதன் முதலில் வாலி திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார்.
பின்பு பல்வேறு படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஒளிபரப்பப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் பிரபலமாகி இவரது கதாபாத்திரம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட விவாத நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் மாரிமுத்து ஜோசியர்களை திட்டி பேசியிருப்பார். இதனால் தான் மாரிமுத்து உயிரிழந்து விட்டார் என்று பல ஜோசியர்கள் அந்த நேரத்தில் வீடியோ வெளியிட்டு வந்தனர். மேலும் சர்ச்சையான பத்திரிக்கையாளரான பயில்வானும் மாரிமுத்துவை பற்றி தவறாக வீடியோ போட்டு இருந்தார்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இருந்து வந்தனர். தற்போது மாரிமுத்துவின் தம்பி, பயில்வானின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். "கடவுளை குறித்து பேசியதால்தான் என் அண்ணன் இறந்தார் என்றால், நானும் இப்போது கடவுள் இல்லை என்கிறேன். என்னையும் அந்த கடவுள் கொல்லட்டும் அப்போது நீங்கள் கூறியதை நம்புகிறேன்" என்று கூறி, பயில்வான் பணத்திறகாக என்ன வேணாலும் பேசுவாரா என்று காட்டமாக பேசி இருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.