சினிமா பிக்பாஸ்

மாறி மாறி பயங்கரமாக அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.! புதிய டாஸ்க்கால் ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!!

Summary:

contestant hardwork to new task at bigboss

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும்  இன்னும்இறுதி கட்டத்திற்கு  இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். மேலும் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் சுயநலத்துடனும், முழுமூச்சுடனும் கடுமையாக உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்றும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பயங்கரமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களது உருவம்கொண்ட பெட்டிகளை அடுக்க வேண்டும். இதை மற்ற போட்டியாளர்கள் பந்தால் அடித்து களைக்க வேண்டும். இறுதியில் பெட்டிகளை அடுக்கி முடிக்கும் போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கின்  வெற்றியாளர், ஆனால் இவர்கள் பெட்டிகளை அடிக்காமல் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக்கொள்கின்றனர். இந்த பிரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement