புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இந்து மதங்களை புண்படுத்திவிட்டார்.. நடிகை நயன்தாரா மீது மேலும் அதிரடி புகார்!!
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "அன்னபூரணி". இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இந்நிலையில் அன்னபூரணி படத்தில் இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையிலும், படம் லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாகவும் அண்மையில் பஜ்ரங் தள் அமைப்பு மும்பை ஓசிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பின் நிறுவனர் ரமேஷ் சோலங்கி என்பவர் தென் மும்பை லோக்மான்ய திலக் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், அன்னபூரணி படத்தில் கோவில் பூசாரியின் மகளாக நடித்துள்ள நயன்தாரா, கடைசி காட்சியில் பிரியாணி செய்வதற்கு முன் ஹிஜாப் அணிந்து நமாஸ் செய்வார். மற்றொரு காட்சியில் ராமரும், சீதாவும் இறைச்சி சாப்பிட்டதாக கூறி நயன்தாராவின் நண்பர் அவரை இறைச்சி வெட்டும்படி ஊக்குவிப்பார்.
இவ்வாறு படம் மத உணர்வுகளை புண்படுத்தும்படியும், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதால் நடிகை நயன்தாரா, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா மற்றும் படக்குழுவினர்கள் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.