பாஜகவில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகை.. வைரல் புகைப்படம்!

பாஜகவில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகை.. வைரல் புகைப்படம்!



Comedy Actress Arthi joined BJP

பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி, அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் அதிகம் என்றாலும், நகைச்சுவை நடிகையாக கால் தடம் பதித்தவர்கள் ஒரு சிலர் மட்டும்தான். அந்த வகையில் மனோரமா, கோவை சரளா, வித்யுலேகா மற்றும் ஆர்த்தி போன்றோர்.

Aarthi Ravi

இதில் ஆர்த்தி பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வந்தார். இதனிடையே அவருடன் நடித்த சக நடிகரான கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்ட இவர், அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகினார். அதன் பின்னர் திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

Aarthi Ravi

இந்த நிலையில் தற்போது நடிகை ஆர்த்தி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். ஏற்கனவே, இவரது கணவர் பாஜகவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.