சினிமா Covid-19

பயங்கர அதிர்ச்சி.! காமெடி நடிகர் செந்தில் குடும்பத்தை தாக்கிய கொடூர வைரஸ்.!

Summary:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொடூர வைரஸான கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ச

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொடூர வைரஸான கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா இரண்டாம் அலையின் வேகம் அதிகரித்துள்ளதால் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சினிமா பிரபலங்கள் பலரை இந்த கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக தாக்கி வருகிறது. சமீபத்தில் நடிகர் மாதவனும், அவரது குடும்பத்தினரும் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலும், அவரது குடும்பத்தினரும் கொடூர வைரஸான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் மூத்த காமெடி தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவந்தார். மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement