சினிமா

தளபதி விஜயின் கையில் இருப்பது இந்த சீரியல் நடிகையா?

Summary:

colors-tv-serial-actress-hima-bindhu-childhood-photo-with-vijay

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாகவும், அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர் நடிகர் விஜய். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர்.

தற்போது தளபதி விஜய் நடித்து முடித்து கொரோனா பாதிப்பு காரணமாக மாஸ்டர் படம் திரைக்கு வராமல் இருந்து வருகிறது. இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்புகைப்படத்தில் இருக்கும் அச்சிறு குழந்தை கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே என்ற சீரியலின் கதாநாயகி ஹிமா பிந்து தான். தற்போது அப்புகைப்படத்தை ஹுமா பிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement